கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள தயாராகிறது British Airways!
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், உலகளவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் தாய் அமைப்பான International Airlines Group (IAG) விமான பயணச்சீட்டுகளின் விலையை அதிகரிக்கபோவதாக அறிவித்துள்ளது.
பொதுவாக விமான நிறுவனங்கள் எரிபொருளை முன்னதாகவே நிலையான விலைக்கு வாங்கும் முன்பதிவு பாதுகாப்பு முறையைப் பின்பற்றுகின்றன.
இருப்பினும், தற்போதைய மத்திய கிழக்கு நாடுகளின் பதற்றத்தால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளிலிருந்து தப்ப முடியாது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, கூடுதல் எரிபொருள் செலவினங்களை ஈடுகட்ட பயணிகள் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இம்மாற்றங்கள் சர்வதேச விமான போக்குவரத்து துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





