ஐரோப்பா

யூத வெறுப்பு சம்பவம் : பிரித்தானிய நீதிமன்றத்தின் தீர்ப்பு!

பிரித்தானியாவில் யூத வெறுப்பு சம்பவத்துடன் தொடர்புடைய  48 வயதான ஷஃபிக் ரஹ்மானுக்கு தற்காலிகமாக பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய வழக்கு இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான ஷஃபிக் ரஹ்மான் (Shafiq Rahman) தனது குற்றங்களை ஒப்புக்கொண்ட நிலையில், வழக்கின் தீர்ப்பை  ஜூலை 10 ஆம் திகதி வழங்குவதாக அறிவித்தார்.

அதுவரை அவரை தற்காலிக பிணையில் செல்ல அனுமதிப்பதாகவும் கூறியுள்ளார்.

ரஹ்மான், மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தபோது, ​​யூத-விரோத சொற்களை கூறி கத்தியதாகவும், பாதிக்கப்பட்டவரை ‘அழுக்கு யூதன்’ என்று விவரித்து குழந்தைகளை கொல்லவதாக கூறியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு காணொளியில், எந்தவித தூண்டுதலும் இன்றி நடந்த இந்தத் தாக்குதலின்போது, ​​ரஹ்மான் அவரது ‘தாடையை உடைத்து விடுவதாக’ மிரட்டியதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்