நெதன்யாகுவிற்கு புற்றுநோய் பாதிப்பு!
இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புரோஸ்டேட் புற்றுநோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.
76 வயதான அவர், கடந்த 2024 ஆம் ஆண்டின் இறுதியில் புரோஸ்டேட் சுரப்பி வீக்கத்திற்காக அறுவை சிகிச்சை செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து வீரியம் மிக்க கட்டிக்கு சிகிச்சை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கமான மருத்துவப் பரிசோதனையின் போது, ஒரு சிறிய, ஆரம்ப நிலை வீரியம் மிக்க கட்டி கண்டறியப்பட்ட நிலையில், உடனடியாக ஜெருசலேமில் சிகிச்சையளிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
புற்றுநோயின் எந்தத் தடயத்தையும் விட்டுவைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
தனது உடல்நிலை குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க ஈரான் முயன்றமையால் இந்த அறிவிப்பை தாமதமாக வெளியிட்டுள்ளதாகவும், தற்போது சிறந்த நிலையில்’ இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.





