ஜனநாயக கடமையை நிறைவேற்றிய தமிழக தலைவர்கள்!
சென்னை , நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தன்னுடைய வாக்கினை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பதிவு செய்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமானது.
5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை தனது ஜனநாயக கடமையை ஆற்றும் வகையில் தன் வீட்டில் இருந்து புறப்பட்ட விஜய், சென்னை – நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

இந்த தேர்தலில் சென்னை – பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
அதேவேளை, தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை – நீலாங்கரையில் தனது வாக்கினை சீமான் செலுத்தினார்.
அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நெடுங்குளம் ஊராட்சிக்குட்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் மக்களுடன் வரிசையில் காத்திருந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.






