ஈரான் துறைமுகங்கள் முற்றுகை : பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள் திருப்பியனுப்பட்டன!
ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டபோது திருப்பி அனுப்பப்பட்ட 31 கப்பல்களில் பெரும்பாலானவை எண்ணெய் டேங்கர்கள் என அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க மத்திய கட்டளை மையம் (CENTCOM) வெளியிட்டுள்ள பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது.
அந்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பெரும்பாலான கப்பல்கள் அமெரிக்காவின் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்துள்ளன.
ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் இந்த நடவடிக்கையில் 10,000-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைகள், 17 போர்க்கப்பல்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் ஈடுபட்டுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





