மரத்துடன் மோதி பஸ் விபத்து: கிண்ணியாவில் 19 பேர் காயம்!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்திற்கு அருகே பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.
கிண்ணியா , மூதூருக்கிடையில் சேவையில் ஈடுபட்டு வரும் பஸ்ஸொன்றே இன்று (22) மாலை வீதியைவிட்டு விலகி மரத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காயமடைந்தோர் கிண்ணியா மற்றும் மூதூர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
படுகாயம் அடைந்த சிலர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் கிண்ணியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.





