உலகம் செய்தி

அமைதி பேச்சில் பங்கேற்க ஈரான் மறுப்பு!

அமெரிக்காவுடன் அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பது குறித்து ஈரான் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முதல்கட்ட அமைதி பேச்சுவார்த்தைகளில் அமெரிக்கா காட்டிய அலட்சியப் போக்கும், டொனால்ட் ட்ரம்பின் அச்சுறுத்தல்களும் இந்தத் தயக்கத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான தற்காலிக போர் நிறுத்தம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும், அடுத்தக்கட்ட அமைதி பேச்சுக்கு இன்னும் திகதி நிர்ணயிக்கப்படவில்லை. இதற்குரிய இராஜதந்திர முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டுவருகின்றது.

இந்நிலையிலேயே ஈரான் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Esmail Baghaei மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி