விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!
தமிழகம் விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பெண்கள் சிகிச்சை பலனின்றி இன்று (21) உயிரிழந்துள்ளனர்.
விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியல் பட்டாசு ஆலையில் நேற்று மாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த விபத்தில் பலத்த தீக்காயம் அடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று உயிரிழந்தனர்.
பேச்சியம்மாள் (51), திருத்தங்கலைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.





