இலங்கை செய்தி

திருமலையில் சோகம்!விபத்தில் இளைஞன் பலி

திருகோணமலை கப்பல்துறை பகுதியில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மாட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் பலியாகியுள்ளார்.

நேற்றிரவு இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் திருகோணமலை நடேசன் கோயில் அடியில் வசித்து வரும் எஸ். நிரோஜன் (36 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

அவருடன் பயணித்த திருகோணமலை -கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த ஜீவராணி (47வயது) கை உடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!