சீதையம்மனை வழிபட நுவரெலியா செல்கிறார் இந்திய துணை ஜனாதிபதி!
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இன்று (20) நுவரெலியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.
இந்திய உதவியுடன் நுவரெலியாவில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டங்களை அவர் பார்வையிடவுள்ளார். மக்களையும் சந்திக்கவுள்ளார்.
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலும் ஈடுபடவுள்ளார்.
இலங்கைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட இந்திய துணை ஜனாதிபதி இன்று மாலை தாயகம் திரும்புவார்.





