வான்பரப்பை மீண்டும் திறந்தது ஈரான்!
சர்வதேச விமான போக்குவரத்துக்காக தமது வான்பரப்பை ஈரான் மீண்டும் திறந்துள்ளது என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி வான் பரப்பை ஈரான் மூடியது.
பாதுகாப்பு கருதி இவ்வாறு மூடப்பட்டிருந்த வான்வழிப் பாதைகள், தற்போது பகுதி அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
குறிப்பாக, ஈரானின் கிழக்குப் பகுதியில் உள்ள வான்வழிப் பாதைகள் மற்றும் சில முக்கிய விமான நிலையங்கள் வழியாகப் பயணங்கள் படிப்படியாகத் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவிப்பின்படி, இன்று காலை முதல் சர்வதேச விமானங்கள் இந்த வழித்தடங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.




