யுரேனியத்தை கையளிக்கமாட்டோம்: ஈரான் திட்டவட்டம்!
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு மாற்ற ஒப்புக்கொண்டதாக அமெரிக்கா தெரிவிக்கும் கருத்தை ஈரான் அரசு முற்றாக மறுத்துள்ளது.
நாட்டின் அணுசக்தி திட்டத்தை நிறுத்துவது தங்களின் கொள்கை முடிவுகளுக்கு எதிரானது என்று ஈரான் அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை நாட்டின் நிலப்பரப்பிற்கு இணையாகக் கருதுவதாகவும், அதனை எக்காரணம் கொண்டும் கைவிட முடியாது என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் இது குறித்து வெளியிட்ட கருத்துக்களை ஈரானிய தேசிய பாதுகாப்பு குழுவின் செய்தித் தொடர்பாளர் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.





