இலங்கை

கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை

வீதிகளில் அதிகப்படியான கரும்புகையை வெளியேற்றும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து முகாமைத்துவம் மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார்.

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிய மோட்டார் வாகனப் பரிசோதகர்களுடன் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன்போது வீதிகளில் பயணிக்கும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதுடன், தேவைப்படும் பட்சத்தில் அவ்வாறான வாகனங்களைக் பொலிஸார் பொறுப்பேற்பார்கள் என்றும் டபிள்யூ. பி. ஜே. சேனாதீர சுட்டிக்காட்டியுள்ளார்.

பொது வீதிகளில் கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குவதற்கு விசேட பொறிமுறையொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொதுமக்கள் அத்தகைய வாகனங்களின் இலக்கத் தகடுகள் அல்லது காணொளி ஆதாரங்களை 070 3500525 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!