முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கைது
இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தன கத்ரி ஆராச்சி ஆயுதங்களுடன், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரீ – 56 ரக இரண்டு மெகசீன்கள், அதற்கான 221 தோட்டாக்கள் மற்றும் கைகுண்டு ஒன்றும், அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





