சீனாவுக்கு ‘செக்’ வைக்கும் ட்ரம்பின் வியூகத்தை முறியடித்தது ரஷ்யா!
ஈரான் துறைமுகங்கள்மீதான அமெரிக்காவின் முற்றுகை நடவடிக்கையால் சீனாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும்பட்சத்தில் ரஷ்யா உதவும் என அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் Sergey Lavrov அறிவித்துள்ளார்.
சீன ஜனாதிபதியுடன் பீஜிங்கில் நடைபெற்ற சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் உறுதியளித்துள்ளார் என தெரியவருகின்றது.
உலகளாவிய அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவு மிகவும் வலுவாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், மாற்று எரிசக்தி மூலமாக ரஷ்யா உருவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





