உலகம் செய்தி

மீண்டும் அமைதி பேச்சு: ட்ரம்ப் பச்சைக்கொடி!

ஈரானுடன் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

“நீங்கள் (ஊடகவியலாளர்கள்) இஸ்லாமாபாத்திலேயே தங்கியிருக்க வேண்டும்.

ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களில் ஏதாவது நடக்கக்கூடும், மேலும் நாங்கள் அங்கு செல்லவே அதிக ஆர்வம் காட்டுகிறோம்.” என New Yorkக்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கைக்கு மத்தியிலேயே மீண்டும் பேச்சு நடத்தப்படக்கூடும் என்பதற்குரிய சமிக்ஞையை ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ளார்.

ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான தற்காலிக போர் நிறுத்தத்தின் கால எல்லை எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி