இரண்டு நாளில் திருப்புமுனை? அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் அதிரடி தகவல்!
அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் விரைவில் மீண்டும் தொடங்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அடுத்த இரண்டு நாட்களில் முன்னேற்றம் ஏற்படலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், பேச்சுவார்த்தைக்காக பாகிஸ்தான் செல்ல அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
இந்த அறிவிப்பு, இஸ்லாமாபாத் நகரில் வார இறுதியில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் வெளியாகியுள்ளது.
அந்த சந்திப்பில் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகள் எந்த ஒப்பந்தமும் இன்றி முடிவடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், தெஹ்ரான் மற்றும் பாகிஸ்தான் இடையே தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்றுள்ளன. எனினும், அமெரிக்காவுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை குறித்து உறுதியான ஒப்பந்தம் எதுவும் இல்லை என ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.





