இலங்கை செய்தி

வெப்பமான வானிலை தொடர்பில் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை

வெப்பமான வானிலை தொடர்பில் நாளைய தினம் 19 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று பிற்பகல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வடக்கு, வடமத்திய, மேல், வடமேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் மொனராகல மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, மனித உடலில் உணரப்படும் வெப்பச் சுட்டெண் பல பகுதிகளில் ஆபத்தான நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மக்கள் வெளிப்புறச் செயற்பாடுகளை தவிர்த்து அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முதியவர்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், வாகனங்களில் குழந்தைகளை விட்டுச் செல்லக் கூடாது என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

வெப்பத் தாக்கத்தைக் குறைக்க இலகுவான, வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!