உலகம் செய்தி

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறுத்தியது இத்தாலி!

இஸ்ரேலுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இத்தாலி பிரதமர் இன்று (14) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ரீதியான உறவுகள் முடங்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தாலியின் இந்த கொள்கை மாற்ற முடிவானது மேற்காசியாவில் நிலவும் பதற்றமான போர் சூழலுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகின்றது.

2003 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட மேற்படி பாதுகாப்பு ஒப்பந்தமானது 5 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டுவருகின்றது.

எனினும், இஸ்ரேலின் போர் நடவடிக்கை காரணமாக ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையிலேயே இத்தாலி மேற்படி முடிவை எடுத்துள்ளது. இஸ்ரேலின் இந்த முடிவு தொடர்பில் இஸ்ரேல் அதிருப்தி அடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

 

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!