சவுத்போர்ட் படுகொலை – விசாரணை அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்
சவுத்போர்ட் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் படுகொலை தொடர்பான விசாரணையில் முக்கியமான சில தகவல்களை விசாரணைத் தலைவர் சர் ஏட்ரியன் ஃபுல்ஃபோர்ட் (Sir Adrian Fulford) வெளியிட்டுள்ளார்.
தாக்குதல் நடத்தியவர் எந்தவிதமான மனநோயாலும் பாதிக்கப்பட்டிருக்கவில்லை என இதன்போது அறிவிக்கப்பட்டது.
மேலும், அவர் தனது பெரும்பாலான நேரத்தை இணையத்தில் மிகவும் பொருத்தமற்ற மற்றும் மனதை பாதிக்கும் உள்ளடக்கங்களை பார்ப்பதில் செலவிட்டதாகவும், அந்த நேரத்தில் பெற்றோர் கண்காணிப்பு அல்லது கட்டுப்பாடுகள் இன்றி இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, சரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் இந்தக் கொடூரமான சம்பவம் நடந்திருக்காது என அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில் சவுத்போர்ட் விசாரணையின் பரிந்துரைகளுக்கமை அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இன்று இதனைக் கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தின் சவுத்போர்ட் நகரில் செயல்பட்டு வந்த நடன பாடசாலையொன்றிற்குள் நுழைந்த 17 வயது சிறுவன், அங்கிருந்த சிறுவர்கள் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொண்டத்தில் 03 சிறுவர்கள் உயிரிழந்ததுடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர்.
பின்னர் அந்த சிறுவனுக்கு குறைந்தபட்சம் 52 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.





