மூளைக்காய்ச்சல் பரவல் – அடுத்த வாரம் 12,000 பேருக்கு இரண்டாவது டோஸ் வழங்க நடவடிக்கை
இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் மூளைக்காய்ச்சல் நோய்ப் பரவலைத் தொடர்ந்து, மெனிஞ்சைடிஸ் (meningitis) B தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன.
சுமார் 12,000 பேருக்கு இந்த இரண்டாவது டோஸ் வழங்கப்பட உள்ளது என தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.
இந்த நோய்ப் பரவல் காரணமாக இருவர்பேர் உயிரிழந்ததுடன், 19 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்பின்னர், பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக தடுப்பூசி வழங்கும் திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கேன்டர்பரி, ஃபேவர்ஷாம் மற்றும் ஆஷ்ஃபோர்ட் பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் ஒன்லைன் மூலம் முன்பதிவு செய்து தடுப்பூசி பெறலாம்.
இந்த தடுப்பூசி, இங்கிலாந்தில் பரவலாக காணப்படும் மெனிங்கோகாக்கல் B வகை பாக்டீரியாக்களுக்கு எதிராக பாதுகாப்பு அளிப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





