உலகம் செய்தி

ஒட்டுமொத்த உலகையும் திருப்பிபார்க்க வைத்த ஈரான் சபாநாயகரின் X பதிவு!

அமைதி பேச்சுக்காக இஸ்லாமாபாத் வருவதற்கு முன்னர் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் பதிவிட்ட எக்ஸ் பதிவானது உலகின் கவனர்த்தை ஈர்த்துள்ளது.

அவர் வெளியிட்ட படமும், அதற்கு வழங்கிய தலைப்பும் சமூக ஊடகங்களில் வைரலாகிவருகின்றது.

ஈரான் மினாப் நகரில் பாடசாலைமீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலில் 168 மாணவர்கள் பலியானார்கள்.

ஈரான் பேச்சுக்குழு பயணித்த விமானத்தில் முன் இருக்கையில் உயிரிழந்த மாணவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயல் பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் ஈரானின் துயரத்தையும் அதன் தூதரக முயற்சிகளையும் உலகுக்கு அடையாளப்படுத்துகிறது.

“இந்த விமான பயணத்தில் என் தோழர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைதி பேச்சின்போது மேற்படி படுகொலைக்கான பொறுப்புகூறலை ஈரான் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!