காலநிலை மாற்றம் : கேள்விக்குள்ளாகும் கடல் உயிரினங்களின் இருப்பு!
காலநிலை மாற்றத்தின் காரணமாக வரும் காலங்களில் பென்குயின்கள் அழியும் நிலை ஏற்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்நிலை அபாயகரமான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கடல் வெப்பநிலையால் கிரில் (krill ) எனப்படும் சிறு கடல் உயிரினங்களின் இருப்பு குறைந்து வருகிறது.
கடந்த 25 ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, புதிய எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
பென்குயின்களைப்போல் அண்டார்டிக் உரோமக் கடல் நாய்களின் நிலையும் அக்கறை’ நிலையிலிருந்து ‘அபாயகரமான’ நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதேநேரம் கடல் நாயின் நிலை ‘குறைந்த அக்கறை’ நிலையிலிருந்து ‘பாதிக்கப்படக்கூடிய’ நிலைக்கு மாறியுள்ளது.
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) பாதுகாப்பு மதிப்பீடுகள், இந்த உயிரினங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள வியத்தகு சரிவை எடுத்துக்காட்டுகின்றன.
இது, புவியை வெப்பமாக்கும் பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளைத் தீவிரப்படுத்துகிறது.





