உலகம் செய்தி

ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கும் நாடுகளுக்கு 50% வரி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், எந்தவித விதிவிலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார்.

இதனுடன், ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் அமெரிக்கா, ஈரானுடன் நெருக்கமாக இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், ஈரானில் யுரேனியம் செறிவூட்டல் நடைபெறாது என்றும், அணு தொடர்பான செயல்பாடுகளை முழுமையாக நீக்க அமெரிக்கா இணைந்து செயல்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஈரானின் அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவின் கடுமையான செயற்கைக்கோள் கண்காணிப்பில் உள்ளதாகவும், சுங்கவரி மற்றும் பொருளாதார தடைகளை தளர்த்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

மேலும், 15 அம்சங்களைக் கொண்ட பேச்சுவார்த்தைகளில் பல முக்கிய அம்சங்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!