உலகம் செய்தி

ஈரானில் மூன்று விமான நிலையங்கள்மீது தாக்குதல்!

ஈரான் தலைநகரான தெஹ்ரான் மற்றும் அந்நாட்டின் பிற பகுதிகளிலுள்ள இராணுவ நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேலிய இராணுவம் பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

குறிப்பாக Bahram, Mehrabad மற்றும் Azmayesh ஆகிய மூன்று விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஏனைய சில இலக்குகள்மீதும் பாரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

ஈரானின் இராணுவ உள்கட்டமைப்புகளை அழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேவேளை, பொது மக்களின் இருப்பிடம் உட்பட சிவில் இலக்குகளை இஸ்ரேல் குறிவைப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

இது சர்வதேச சட்ட விதிமுறைகளைமீறும் செயலாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும், ராணுவ இலக்குகளையே தாம் தாக்கி அழித்துவருவதாக இஸ்ரேல் கூறுகின்றது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!