இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து 9 ஆம் திகதி சபையில் விவாதம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை (09) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையின்படி, எதிர்க்கட்சியினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த விவாதம் நடத்தப்படவுள்ளது.

நாடாளுமன்றம் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இந்த வாரம் மூன்று நாள்களுக்குக் கூடவுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதம் எதிர்வரும் வியாழக்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடைபெறும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னாலுள்ள சூத்திரதாரிகளைக் கண்டறிவது தொடர்பாக அண்மைக்காலமாக எழுந்துள்ள அரசியல் சர்ச்சைகள் மற்றும் புதிய வெளிப்பாடுகள் குறித்து இந்த விவாதத்தின்போது  கருத்தாடல் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!