இணைய முடக்கம் – உலகளவில் ஈரானுக்குதான் முதலிடம்!
ஈரானில் ஏற்பட்ட இணைய முடக்கம், எந்தவொரு நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே மிக நீண்ட நாடு தழுவிய இணைய முடக்கமாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இணைய கண்காணிப்புக் குழுவான நெட்பிளாக்ஸ் வெளியிட்டுள்ள தகவலில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது முந்தைய அனைத்து உலகளாவிய சாதனைகளையும் விஞ்சியுள்ளது.
இந்த இணைய முடக்கம் 864 மணிநேரம் நீடித்துள்ளதாகவும், இந்த நிலைமை ஈரானியர்களை வெளி உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாத நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





