விளையாட்டு

இறுதி பந்துவரை பரபரப்பு: ராஜஸ்தான் அணி வெற்றி!

குஜராத் டைட்டன்ஸ் Gujarat Titans அணியை 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் Rajasthan Royals அணி வெற்றிபெற்றுள்ளது.

IPL தொடரின் 9 ஆவது லீக் ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது.

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி தலைவர் ரியான் பராக் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார்.

20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்களைப் பெற்றது.

கடினமான இலக்கை விரட்டிய குஜராத் அணிக்கு சாய் சுதர்சன் (73 ஓட்டங்கள்) தூணாக நின்று அரைசதம் கடந்தார்.

பரபரப்பான கடைசி ஓவரில் குஜராத் அணி வெற்றி பெற 11 ஓட்டங்கள் தேவைப்பட்டன. துஷார் தேஷ்பாண்டே வீசிய அந்த ஓவரில் குஜராத் வீரர்களால் 4 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

குறிப்பாக, கடைசி பந்தில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில், ஓட்டம் ஏதும் எடுக்க முடியாமல் போகவே ராஜஸ்தான் அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது. குஜராத் அணிக்கு இது இந்த சீசனில் இரண்டாவது தோல்வியாகும்.

Dila

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ
error: Content is protected !!