பிரித்தானியர்களுக்கு புயல் எச்சரிக்கை!
டேவ் (Dave) புயல் பிரித்தானியாவை நோக்கி நகர்ந்து வருகின்ற நிலையில் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பு குறித்த புயல் பிரித்தானியாவை நெருங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய 59 பகுதிகளில் உள்ள மக்கள் அத்தியாவசியப் பொருட்களை சேமித்து வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை குறித்த புயல் நிலைமையால் மின்வெட்டு, போக்குவரத்து குழப்பம் மற்றும் உயிர் ஆபத்துகள் ஏற்படக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





