ஐரோப்பா

தம்பதிக்கிடையே நடந்த மோதல் – ஐரோப்பிய தலைவரை கேலி செய்த ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனை கேலி செய்துள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்ரோன்  அவரது துனைவியாருடன் வியட்நாம் பயணம் செய்தபோது தம்பதிக்குள் எழுந்த மோதல் போக்கையே ட்ரம்ப் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்திற்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று எதிர்வினையாற்றியுள்ளார். இழிவான கருத்துக்கள் “நாகரிகமானவையாகவோ அல்லது தரமானவையாகவோ இல்லை” என மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ட்ரம்பின் இந்த செயலுக்கு தீவிர இடதுசாரியான ‘பிரான்ஸ் அன்பௌட்’ கட்சியின் தலைவர் மானுவல்  பொம்பார்ட் ( Manuel Bompard) உட்பட, பிரெஞ்சு அதிபரின் அரசியல் எதிரிகள் கூட மக்ரோனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளனர்.

வெள்ளை மாளிகையில் நடந்த ஈஸ்டர் மதிய விருந்தின்போது பேசிய ட்ரம்ப், மக்ரோனை அவரது மனைவி மோசமாக நடத்துவதாகவும், மக்ரோன் அவரது மனைவியின் தாக்குதலில் இருந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!