இஸ்ரேலின் புதிய மரண தண்டனை சட்டத்துக்கு வலுக்கிறது எதிர்ப்பு!
இராணுவ நீதிமன்றங்களால் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின் கீழ் தண்டிக்கப்படும் பாலஸ்தீனியர்களுக்கு தூக்குத் தண்டனை வழங்குவதை கட்டாயமாக்கும் புதிய சட்டத்தை இஸ்ரேல் நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது.
இந்தச் சட்டம் யூதர்களுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டாலும், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பவர்களை மட்டுமே இது இலக்கு வைக்கும் என்பதால் குறிப்பாக பாலஸ்தீனியர்களையே பாதிக்கும் என்று விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மன் உள்ளிட்ட பல நாடுகள் இந்த நடவடிக்கையை மனிதநேயமற்றது என்று கூறி கடுமையாக எதிர்த்துள்ளன.
எனினும், இஸ்ரேல் தனது சொந்தச் சட்டங்களை இயற்றிக் கொள்ளும் இறையாண்மை உரிமையை அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
இந்தச் சட்டம் இஸ்ரேலின் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்கும் என்றும், சர்வதேச அளவில் அந்நாட்டின் மீதான விமர்சனங்களை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.





