செய்தி தமிழ்நாடு

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம் – கருணாநிதியின் ஊரில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கும் ஸ்டாலின்

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், எதிர்வரும் 31 ஆம் திகதி மாலை 05 மணிக்கு திருவாரூரில்
தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின் பிரச்சாரம்
செய்து வாக்கு சேகரிக்க உள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க. ஸ்டாலின், முதற்கட்டமாக திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் ஊரான திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“திருவாரூர் தெற்கு ரத வீதியில் மாலை 05 மணிக்கு இந்த பிரச்சார பொதுக்கூட்டம் தொடங்கும். திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளின் வேட்பாளர்கள் இதில் கலந்து கொள்வார்கள்.

இதனைத் தொடர்ந்து ஏப். முதலாம் திகதி காலை 9 மணிக்கு திருச்சி உழவர் சந்தையில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இதில், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், மணப்பாறை, முசிறி, துறையூர் ஆகிய தொகுதிகளின் சட்டமன்ற வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கரூர் பொதுக்கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் உரையாற்ற உள்ளார். இதில், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளின் வேட்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.

ஏப். 2 ஆம் திகதி காலை 9 மணிக்கு ஈரோட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 5 மணிக்கு கோவை பொதுக்கூட்டத்திலும் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!