சென்னையில் இரண்டாம் சர்வதேச விமான முனையம் டிசம்பரில் திறப்பு – இத்தனை கோடியா?
சென்னையில் உருவாகி வரும் ஒருங்கிணைந்த இரண்டாவது சர்வதேச விமான முனையம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க இந்த விரிவாக்கம் முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
தற்போது தினமும் 450 க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 55,000 பயணிகள் நாள்தோறும் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.
இதனால் ஏற்பட்ட நெரிசலை குறைக்கும் வகையில் 2,467 ரூபா கோடி மதிப்பில் புதிய முனைய கட்டுமானம் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்டம் 2023 ஏப்ரலில் முடிவடைந்து, அதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
தற்போது இரண்டாம் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதலில் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மேற்கு ஆசிய பதற்றம் காரணமாக ஸ்டீல் உள்ளிட்ட பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால், திட்டம் தாமதமடைந்துள்ளது.





