IPL கிரிக்கெட் திருவிழா இன்று ஆரம்பம்!
கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த IPL T-20 கிரிக்கெட் தொடர் இன்று (28) ஆரம்பமாகின்றது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) , சன்ரைசர்ஸ் ஹைதரபாத் ஆகியன மோதுகின்றன.
இம்முறை தொடரில் ஆர்சிபி, சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளுடன் இதுவரை பட்டம் வெல்லாத டெல்லி கேப்பிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகளும் களமிறங்குகின்றன.
IPL தொடரில் கடந்த ஆண்டு ஜூன் 4ஆம் திகதி பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
மைதானத்தில் 11 இருக்கைகள் அவர்கள் நினைவாக காலியாக வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





