60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது
இந்தியாவில் 60 நாட்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல், எல்பிஜிக்கு எந்த பற்றாக்குறையும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பெட்ரோல், டீசல், எல்பிஜி-க்கு எந்த பற்றாக்குறையும் இல்லை. நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு உள்ளது. அவை வழக்கம்போல் இயங்கி வருகின்றன. பெட்ரோல், டீசல் விற்பனையில் எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
உலகின் நான்காவது பெரிய சுத்திகரிப்பு நாடான இந்தியா, பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் உலக அளவில் 5 ஆவது பெரிய நாடாக உள்ளது.
உள்நாட்டில் எரிபொருள் கிடைப்பதை அமைப்பு ரீதியாக உறுதி செய்துள்ளதுடன் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு தொடர்ந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருட்களை வழங்கி வருகிறது.
கச்சா எண்ணெயை பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களாக மாற்றும் நாட்டின் அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் 100 சதவீதத்துக்கும் அதிகமான பயன்பாட்டுத் திறனுடன் இயங்கி வருகின்றன.
அடுத்த 60 நாட்களுக்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ஏற்கனவே உறுதி செய்துள்ளன. விநியோகத்தில் எந்த பற்றாக்குறையும் இல்லை.
இந்தியாவிடம் மொத்தம் 74 நாட்களுக்கான கச்சா எண்ணெய் மற்றம் எரிபொருள் கையிருப்பு உள்ளது. மேற்கு ஆசிய நெருக்கடியின் 27 ஆவது நாளில் நாம் இருக்கும் இந்த வேளையிலும், உண்மையான கையிருப்பு சுமார் 60 நாட்களுக்கு உள்ளது.
உலகளவில் என்ன நடந்தாலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குத் தேவையான சீரான விநியோகம் உள்ளது” என . குறிப்பிடப்பட்டுள்ளது





