மின்னல் வேகத்தில் ஏறும் தங்கத்தின் விலை!
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழலுக்கு மத்தியில், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தைப் பதிவு செய்து வருகிறது.
அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் (Ounce) தங்கத்தின் விலை 128.52 டொலர்கள் அதிகரித்து 4,528.19 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
இது 2.49 சதவீத அதிகரிப்பாகும். இதேவேளை, இலங்கையில் தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 393,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.





