26 ஆம் திகதி இலங்கை வருகிறது ரஷ்ய தூதுக்குழு: பின்னணி என்ன?
ரஷ்யாவின் உயர்மட்ட தூதுக்குழுவொன்று நாளை மறுதினம் 26 ஆம் திகதி இலங்கை வருகின்றது.
ரஷ்யாவின் பிரதி எரிசக்தி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான குழுவே கொழும்பு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.
28 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கி இருக்கும் மேற்படி குழுவினர் ஜனாதிபதி, பிரதமர், வெளிவிவகார அமைச்சர் உட்பட முக்கிய பிரமுகர்களுடன் பேச்சு நடத்தவுள்ளனர்.
மேற்காசியாவில் நிலவும் மோதல்களுக்கு மத்தியில், எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் பின்னணியில் ரஷ்ய குழுவின் இந்தப் பயணம் இடம்பெறவுள்ளது.
ரஷ்ய எண்ணெய் மீதான விற்பனைத் தடைகளை அமெரிக்கா தளர்த்திய பின்னர், ரஷ்யாவிலிருந்து எரிசக்தி விநியோகத்தைப் பெறுவதற்குரிய முயற்சியில் இலங்கை இறங்கியுள்ளது.




