முடிவை மாற்றினார் தஞ்சம் கோரிய வீராங்கனை: ஈரான் திரும்ப திட்டம்!
ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈரான் கால்பந்தாட்ட அணி வீராங்களைகளில் ஒருவர் தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். அவரது தனது தாய் நாட்டுக்கு திரும்பும் முடிவை எடுத்துள்ளார்.
மேற்படி தகவலை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் உறுதப்படுத்தியுள்ளார்.
குறித்த பெண் ஈரானிய தூதரக அதிகாரிகளுடன் வெளியேறியதால் மற்ற வீராங்கனைகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்த முடிவுகள் யாவும் எவ்வித அழுத்தமுமின்றி சுயவிருப்பத்தின் பெயரிலேயே எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றனர்.
எனினும், ஆஸ்திரேலிய அரசு தமது வீராங்கனைகளை பயமுறுத்தி பிணைக் கைதிகளாக வைத்திருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஆஸ்திரேலியா தனது நாட்டில் பெண்களுக்கு உள்ள தனிமனித சுதந்திரத்தை பெருமையுடன் சுட்டிக்காட்டினாலும், ஈரான் இதனை ஒரு அரசியல் சூழ்ச்சியாகவே பார்க்கிறது.
இந்த விவகாரம் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு ராஜதந்திர மோதலை உருவாக்கியுள்ளது.




