இலங்கையில் ஆயுதங்களுடன் சிக்கிய படகு!
இலங்கைக்குத் தெற்கே ஆழ்கடலில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் ஆயுதங்களைக் கடத்திச் சென்ற நெடுநாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு, மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக தற்போது கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கையைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் கடற்படையினர் இவ்வாறான தொடர்ச்சியான கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





