இந்தியா செய்தி

ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்​டின் அனு​ம​தி​யும் தேவை​யில்லை – இந்தியா திட்டவட்டம்

ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்வனவு செய்வதற்கு எந்த நாட்​டின் அனு​ம​தி​யும் தேவை​யில்லையென இந்திய மத்​திய அரசு தெரி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் ஏற்பட்டுள்ள போர் பதற்​றம் காரணமாக, ஹார்​முஸ் நீரிணையில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து தடைபட்​டு, உலக அளவில் கச்சா எண்​ணெய் விநி​யோகம் பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

இதனால் கச்சா எண்​ணெய் விலை சுமார் 30 சதவீதத்​துக்கு மேல் உயர்ந்​துள்​ளது. இதற்கு காங்​கிரஸ் உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகள் கண்​டனம் வெளியிட்டன.

இந்நிலையில், 30 நாட்​களுக்கு ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கிக் கொள்ள இந்​தி​யா​வுக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டிருப்​ப​தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறி​யிருந்​தார்.

இந்நிலையில் ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய்கொள்வனவு செய்ய இந்​தியா ஒரு​போதும் எந்த நாட்​டின் அனு​ம​தி​யை​யும் சார்ந்து இருந்​த​தில்​லையென மத்​திய அரசு வெளி​யிட்ட அறிக்​கை​யில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்​கை​யில் ‘‘ஹார்​முஸ் பாதை​யில் பதற்​றம் அதி​கரித்து வரும் நிலை​யிலும், இந்​தி​யா​வின் எரிசக்தி விநி​யோகம் பாது​காப்​பாக​வும் சீராக​வும் உள்​ளது.

இந்​தியா தனது கச்சா எண்​ணெய் ஆதா​ரங்​களை 27 நாடு​களி​லிருந்து 40 நாடு​களாக பன்​முகப்​படுத்​தி​யுள்​ளது. இதன் மூலம் பல மாற்று விநி​யோகப் பாதைகளை உறுதி செய்​துள்​ளது. தேசிய நலன் கரு​தி, எங்​கெல்​லாம் மிக​வும் மலி​வான விலை​யில் எண்​ணெய் கிடைக்​கிறதோ, அங்​கிருந்து இந்​தியா அதனை வாங்​கு​கிறது’’ என கூறப்​பட்​டுள்​ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!