ஐரோப்பா

அசேலம் நிராகரிக்கப்பட்ட நிலையில் பிரித்தானியாவை விட்டு வெளியேற விரும்புவோருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு!

அசேலம் நிராகரிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்புவதற்கு ஏதுவாக பிரித்தானிய அரசாங்கம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டரில் நேற்று நடந்த ஒரு நிகழ்வில் உள்துறை செயலாளர் சபானா மஹ்மூத் இதனை அறிவித்துள்ளார்.

இதன்படி குழந்தைகளைக் கொண்ட புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் , நாட்டை விட்டு விரைவாக வெளியேற ஏதுவாக 40000 பவுண்ட்ஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

இந்த சலுகை நாட்டைவிட்டு நாடுகடத்தப்படுவோம் என்ற சந்தேகம் உள்ளவர்களுக்கும் பொருந்தும்.

உள்துறைச் செயலாளரின் குடியேற்ற மாற்றத்தின் ஒரு பகுதியாக, புலம்பெயர்ந்தோர் ஹோட்டல்களில் வசிக்கும் 150 குடும்பங்களுக்கு இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தை விட்டு தானாக முன்வந்து வெளியேற, குடும்பத்தில் உள்ள உறுப்பினர் ஒருவருக்கு 10000 பவுண்ட்ஸ் வழங்கப்படும். இவ்வாறாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

அவர்கள் பதிலளிக்க ஏழு நாட்கள் அவகாசம் வழங்கப்படும், மேலும் அவர்கள் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்றால், உள்துறை அலுவலகம் அவர்களை வலுக்கட்டாயமாக நாட்டிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!