இலங்கை செய்தி

ஈரான் தூதரகத்துக்கு சென்று அனுதாபம் பகிர்ந்தார் ரிஷாட்!

ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி காமெய்னியின் மறைவை முன்னிட்டு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபங்களை பதிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து, இன்று (05) கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், அங்குள்ள தூதுவர். அலிடெர்ஷா டெல்கொஷ்வை சந்தித்து தனது அனுதாபத்தைத் பகிர்ந்துகொண்டதுடன், இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.

இந்த விஜயத்தின் போது, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஹீர் மரிக்கார் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளரான அஷ்ரப் தாஹீர் ஆகியோரும் கலந்து கொண்டு தங்களது இரங்கலை பதிவு செய்தனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!