இந்தியா செய்தி

ஈரான் போர்க் கப்பல் விவகாரம் – மோடி மௌனம் காப்பது ஏன்?

இந்தியாவில் இருந்து புறப்பட்ட ஈரானின் போர்க் கப்பலை இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்கியதில் 87 பேர் உயிரிழந்துள்ள போதிலும் பிரதமர் மோடி பதில் அளிக்காமல்மௌனம் காப்பது ஏன் என பாராளுமன்ற மக்களவை எதிர்கட்சித் தலைவரும்,
காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொர்பில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“உலகம் தற்போது மிகுந்த அசாதாரணமும், பதற்றமும் நிறைந்த காலக்கட்டத்தில் இருக்கிறது.
கடுமையான சூழ்நிலைகள் நமது முன்பு காத்திருக்கின்றன.

இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. நமது எண்ணெய் இறக்குமதியில்
40 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்கின்றன.

எல்.பி.ஜி. மற்றும் எல்.என்.ஜி. விநியோக நிலை இன்னும் மோசமாக உள்ளது.

இந்த மோதல் நமது அருகிலேயே வந்துவிட்டது. இந்தியப் பெருங்கடலில் ஒரு ஈரான் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் பிரதமர் இதுகுறித்து எதுவும் சொல்லவில்லை.

இதுபோன்ற ஒரு தருணத்தில் நமக்கு உறுதியான மற்றும் நிதானமான தலைமையே தேவை.
அதற்கு பதிலாக நம்முடைய சுய தன்மையை விட்டுக் கொடுத்த ஒரு சமரச பிரதமரையே இந்தியா பெற்றுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி