இலங்கை செய்தி

ஈரான் உச்ச தலைவர் மறைவு: சம்பாந்துறையில் துக்கம் அனுஷ்டிப்பு!

அயத்துல்லா அலி காமெனீ அவர்களின் மறைவையொட்டி சம்மாந்துறையில் நேற்று துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது.

உலக இஸ்லாமிய தலைவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவராகக் கருதப்பட்ட அவர்களின் இழப்பை நினைவுகூரும் வகையில், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் அ.அப்னான் தலைமையில் இளைஞர்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிகழ்வில் பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். மறைந்த தலைவரின் சேவைகளையும் அவரின் பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து துக்கம் அனுசரிக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

அமைதியான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வு பிரதேச மக்களின் கவனத்தை ஈர்த்தது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!