பொது அவசரகால நிலைமை நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
பொது அவசரகால நிலைமையை நீடித்து அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால்
அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக
இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகால நிலைமை
நீடிக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவும் பொது அவசரகால நிலைமையைக் கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை
வர்த்தமானி ஊடாக வலியுறுத்தப்பட்டள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியைப் பேணுவதற்கும், அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான வழங்கல்கள்
மற்றும் சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.





