இலங்கை செய்தி

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

யாழ். வடமராட்சி கிழக்கு, குடத்தனை – வலிக்கண்டிப் பகுதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த இளைஞர் ஒருவர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அதே இடத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் ஜதுர்சன் (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்று திங்கட்கிழமை காலை, அந்த வீட்டின் பகுதியிலிருந்து கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, இளைஞர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார். உயிரிழந்து சில நாள்கள் ஆகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவ இடத்துக்கு நேரில் சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வேலுப்பிள்ளை பாஸ்கரன், ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.

பின்னர், சடலத்தைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறும், முறையான பிரேத பரிசோதனை அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறும் மருதங்கேணி பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்த விபரீத முடிவுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், மருதங்கேணி பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!