பிரித்தானியாவின் விமானப்படை தளம் மீது தாக்குதல் – அதிரடியாக இடமாற்றம்
சைப்ரஸில் தீவில் உள்ள பிரித்தானியாவின் ரோயல் விமானப்படை தளமான அக்ரோதிரி (Akrotiri) மீது ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் அக்ரோதிரியில் வசிக்கும் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் சைப்ரஸ் தீவிற்கு அருகிலுள்ள தங்குமிடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள்காட்டி முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் பாதுகாப்புக்கு முழுமையான முன்னுரிமையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானியாவின் பாதுகாப்பையும் நலன்களையும் பாதுகாக்க வழமையான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.





