இந்தியா

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

மத்திய கிழக்கு போர்: புருவத்தை உயர்த்தியது டெல்லி!

மத்திய கிழக்கின் தற்போதைய போர் சூழ்நிலை கவலை அளிக்கின்றது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

கனடா பிரதமருடன் இணைந்து டெல்லியில் இன்று ஊடக சந்திப்பை நடத்தினார்.

இதன்போது மத்திய கிழக்கில் தற்போது அதிகரித்து வரும் மோதல் குறித்த பிரதமர் மோடியிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், ‘‘இத்தகைய பிரச்சினைகளுக்கு, பேச்சு மற்றும் தூதரக முயற்சிகள் மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்பதை இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.

மோதல்களை அமைதியான முறையில் தீர்க்கும் நிலைப்பாட்டை இந்தியா நீண்ட காலமாக பின்பற்றி வருகிறது.

பயங்கரவாதம், தீவிரவாதம், தீவிர சிந்தனைகள் ஆகியவை நமக்கு மட்டுமல்லாது, உலகம் முழுவதற்கும் பெரிய சவால்களாக உள்ளன.

இத்தகைய அச்சுறுத்தல்களை சமாளித்து உலக அமைதியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்ய நாடுகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.” என்று குறிப்பிட்டார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி,

‘‘பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிலைமையை நெருக்கமாக கண்காணித்து வருகிறது. அங்குள்ள நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறது.” எனக் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!