பா.ஜ.கவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது: வைகோ திட்டவட்டம்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ம.தி.மு.க. தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என்று MDMK அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ Vaiko தெரிவித்தார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வருடன் இன்று (28) நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
“ தமிழக முதல்வரிடம் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. இதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெற்றது.
தொகுதிப் பங்கீடு பற்றி முதல்வரிடம் எதுவும் பேசவில்லை. தொகுதிப் பங்கீடு குறித்து ம.தி.மு.க. குழு முதற ;சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.
மீண்டும் இரண்டாவது சுற்றுக்கு அழைப்பு வந்தால் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
மதிமுக தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என எங்கள் அவைத்தலைவர் சொல்லியுள்ளார். அதுதான் எங்களின் நிலைப்பாடு.
மோடி எத்தனை முறை காவடி தூக்கினாலும், பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற முடியாது. பாஜகவால் தமிழகத்தை ஏமாற்ற முடியாது” எனவும் வைகோ குறிப்பிட்டார்.





