ஆஸ்திரேலியா உலகம்

மத்திய கிழக்கை சூழ்ந்த போர் மேகம்: உலக நாடுகள் உஷார்!

ஈரான்மீதான தாக்குதலையடுத்து மத்திய கிழக்கில் உள்ள தமது நாட்டு பிரஜைகளுக்கு இந்தியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளன.

ஈரான், இஸ்ரேல் மற்றும் லெபனான் ஆகிய நாடுகளில் உள்ள தமது பிரஜைகளை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆஸ்திரேலியா அறிவுறுத்தியுள்ளது.

வுணிக விமானங்கள் கிடைக்கும்போதே அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வான்வழித் தாக்குதல்கள் மற்றும் வான்வெளி மூடப்படுவதால் ஏற்படக்கூடிய விமானப் போக்குவரத்து இடையூறுகள் குறித்து ஆஸ்திரேலியா கவலை வெளியிட்டுள்ளது.

பிராந்தியத்தில் நிலவும் நிலையற்ற பாதுகாப்பு சூழல் காரணமாக அத்தியாவசியப் பொருட்களைச் சேமித்து வைக்குமாறு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இந்தியாவும் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தெஹ்ரானில் உள்ள இந்திய தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஈரானில் உள்ள இந்தியர்கள் முடிந்த வரை வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே வருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!